திருச்சி மாவட்டம், சமயபுரம் டோல்பிளாசா அருகே தனியார் திருமண மண்டபத்தில் ஆண்கள், பெண்களுக்கான மாநில அளவிலான உடற்கட்டு போட்டி, வளுதூக்கும் போட்டி திருச்சி மாவட்ட வலுதூக்கும் போட்டி செயலாளர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது. இந்தப்போட்டியில் 530 ஆண்கள், 40 பெண்கள் பங்கேற்று தங்களது தனித்திறனை வெளிப்படுத்தி பரிசு மற்றும் பட்டம் பெற்றனர்.