தேனி மாவட்டம் ஆண்டிபட்டி ஒன்றியத்தில் பட்டகடமலைக்குண்டு அருகே துரைச்சாமிபுரம் வைகை ஆற்றில் இரவு நேரங்களில் மாட்டுவண்டி மூலமாக மணல் திருடி கொண்டிருப்பதாக எஸ்.பி .,தனிப்பிரிவு போலீசார் சேகர் அவர்களுக்கு தகவல் கிடைத்தது . இதனைத் தொடர்ந்து கடமலைக்குண்டு எஸ்.ஐ., ஜெய்குமார் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மணல் திருட்டில் ஈடுபட்ட குப்பிநாயக்கன்பட்டி சேர்ந்த சுப்புராஜ் 53, அலெக்ஸ் பாண்டி 38, ஆதன் 52 , சோலைத்தேவன் பட்டியைச் சேர்ந்த அழகர்சாமி 53 ஆகியோரை கைது செய்து, மணல் திருட்டுக்கு பயன்படுத்திய மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.