அல்லிவிளாகம் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜிடம் பட்டா மாற்றம் செய்ய கிராம நிர்வாக அலுவலர் செந்தில்நாதன் ரூ.5 ஆயிரம் லஞ்சமாக கேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த செல்வராஜ் நாகை மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரூபாய் ஐந்தாயிரம் பணத்தில் ரசாயனப் பொடி தூவி செல்வராஜிடம் கொடுத்து செந்தில்நாதனிடம் கொடுக்க சொல்லி உள்ளனர். அதனைத் தொடர்ந்து செல்வராஜ் செந்தில்நாதனை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார் அப்போது தான் சட்டநாதபுரம் கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் இருப்பதாக தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவரது வீட்டிற்கு சென்ற செல்வராஜ் தான் எடுத்து வந்த ரசாயனப் பொடி தடவிய பணத்தை கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கிராம நிர்வாக அலுவலர் செந்தில்நாதன் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்