கோவை ரவுண்ட் டேபிள் இந்தியா, லேடிஸ் சர்க்கிள் அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்கள் பல்வேறு நலத்திட்ட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவையில் இயங்கி வரும் ஆதரவற்ற 15 குழந்தைகளின் விமான பயண கனவை நனவாக்கும் வகையில் கோவையிலிருந்து சென்னை செல்லும் விமானத்தில் பறக்க வைத்து அழகு பார்த்துள்ளனர்.