தமிழகமெங்கும் மறைந்த தமிழக முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்களின் 74 வது பிறந்தநாளை முன்னிட்டு அதிமுகவினர் பல்வேறு நலத்திட்டங்கள், சிற்றுண்டிகள், இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் பிறந்த 12 பச்சிளம் குழந்தைகளுக்கு தலா 1கிராம் எடையுள்ள 12 தங்க மோதிரங்களை பச்சிளம் குழந்தைகளின் பிஞ்சு விரலில் அணிவித்து மகிழ்ந்தனர்