திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து நம்பியூருக்கு அரசு டவுன் பஸ் ஒன்று புறப்பட்டது.60க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. பேருந்தானது புஷ்பா சந்திப்பை கடந்தபோது நடத்துனரான ரங்கசாமி தனது பாக்கெட்டில் இருந்த மணிபர்ஸ் திடீரென காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதையடுத்து அவர் பேருந்து ஓட்டுனரிடம் தகவலை கூறி பேருந்தானது சாலையோரம் நிறுத்தப்பட்டது.