கரூர் நகரில் உள்ள பொது பணித்துறைக்கு சொந்தமான கனிமம் மற்றும் கண்காணிப்பு உட்கோட்டம் உதவி செயற் பொறியாளர் ஆலுவலகத்தை மாட்டு வண்டி தொழிலாளர்கள் 50க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டனர். இதனையடுத்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளை சந்தித்த மாட்டுவண்டி தொழிலாளர்கள் இது தொடர்பாக விளக்கங்களை கேட்டறிந்தனர். இன்னும் 15 தினங்களுக்குள் அதற்கான பணிகள் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.