கோகுல்ராஜ் கொலை வழக்கில் 11 பேர் குற்றவாளிகள், ஒருவர் இறப்பு மீதமுள்ள 10 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு. சங்கர், அருள்செந்தில், செல்வகுமார் , தங்கதுரை, சுரேஷ் ஆகிய 5பேர் விடுதலை. 8ம்தேதி தண்டனை விபரம் தெரிவிக்கப்படும் என நீதிபதி சம்பத் குமார் தீர்ப்பு தெரிவித்ததையொட்டி இன்று தண்டனை அறிவிக்கப்படும் சூழ் நிலையில் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டவர்கள் போலீஸ் வேனில் பலத்த பாதுகாப்புடன் மதுரை மாவட்ட நீதிமன்றத்திற்கு வந்தனர். இரு தரப்பினர்கள் வந்ததையொட்டி பரபரப்பான சூழ் நிலையில் மாவட்ட நீதிமன்றம் பலத்த போலீஸ் பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது.