மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் வன அலுவலர்கள் மாநாட்டின் 3-ம் நாள் கூட்டத்தில் கலந்து கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். இதில் தமிழக அரசைப் பொறுத்தவரை தொழில் வளர்ச்சி, சுற்றுச்சூழல் ஆகிய இரண்டையும் ஒரே தராசில் இருக்கக்கூடிய இரு தட்டுகள் போலவே கருதுவதாக அவர் கூறியிருக்கிறார்.