திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வினோபா நகரைச் சேர்ந்த சவுந்தரபாண்டி. பசுங்கிளி. தம்பதியின் மகன் பாண்டித்துரை இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு விபத்து ஒன்றில் இறந்து போனார் அப்போது அவருக்கு வயது 21. அவருடைய மூத்த சகோதரி பிரியதர்ஷினியின் மகள் தாரிகா ஸ்ரீ. மகன் மோனேஷ் குமரன். ஆகியோரது காதணி விழா ஒட்டன்சத்திரத்தில் இன்று நடைபெற்றது பாண்டித்துரை இறந்து போனதால் அவருடைய சிலிக்கன் உருவச் சிலையை வைத்து தாய்மாமன் செய்முறைகள் செய்யப்பட்டு அவரது சிலையின் மடியில் வைத்து குழந்தைகளுக்கு காது குத்தப்பட்டது