சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் பார்சல்களில் போதைப்பொருள்கள் கடத்தப்படுவதாக சென்னையில் உள்ள மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் மத்திய போதை தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சென்னை விமான நிலைய சரக்க பகுதியில் வெளி நாடுகளுக்கு அனுப்பப்படும் பார்சல்களை தீவிர சோதனை செய்தனர். அப்போது சென்னை விமான நிலையத்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பப்படும் பார்சல்களை சோதனை செய்தபோது 56 பெட்டிகளில் கவரிங் நகை அடியில் எபிட்ரின் என்கிற போதை பவுடர் வைத்து கடத்தியது தெறியவந்தது. இதையடுத்து 3 கிலோ போதை பவுடரை பறிமுதல் செய்தனர்.