#anmmedia24 #onlyforbjpnews #கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில்., தமிழ்நாடு சுற்றுச்சூழல் பாதுகாப்பு இயக்கம், சட்டவிரோத கல்குவாரி எதிர்ப்பு இயக்கத்தினர் சார்பில் ஒருங்கிணைப்பாளர் முகிலன் தலைமையில் மனு கொடுக்கப்பட்டது. முன்னதாக சட்டவிரோதமாக இயங்கும் கல்குவாரிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், குத்தகை காலம் முடிந்தும் உரிம காலம் முடிந்தும் இன்றும் செயல்பட்டு வரும் கல்குவாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் முழுக்கங்கள் எழுப்பட்டன. 3 மாதங்களாகியும் கரூர் மாவட்டத்தில் மட்டும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட வில்லை என்றும் ஆகவே கரூரினை சுற்றியுள்ள மற்ற மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வருகின்றது என்றும் ஆனால் கரூரில் மட்டும் நடத்தவில்லை என்றும் கூறி முழக்கங்கள் எழுப்பியபடி மனுக்களை கொடுத்தனர்.