சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கோட்டூர் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் முதல் செவ்வாய் காப்பு கட்டி இரண்டாம் செவ்வாய் திருவிழா நடைபெறும் அதேபோல் இந்த ஆண்டும் 22.2.202 செவ்வாய்க்கிழமை மாலை கொடியேற்றம் காப்பு கட்டுதல் நடைபெற்றது அதைத்தொடர்ந்து தினந்தோறும் மாலையில் மாரியம்மனுக்கு சங்காபிஷேகம் செய்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெறும் 7ம் திருநாளை முன்னிட்டு உற்சவமூர்த்தி தேரில் எழுந்தருளி கோவிலை சுற்றி வீதி உலா வரும்பொழுது பக்தர்கள், பொதுமக்கள், தங்கள் வீட்டின் முன்பு அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். தேர் வரும்பொழுது வாணவேடிக்கைகள் வெகுவிமர்சையாக வெடிக்கச் செய்தனர்