#cithiraitv #சேலம் : நடிகை ஆண்ட்ரியாவை நடனமாட சொல்லி ஆரவாரம் செய்த ரசிகர்கள் பாடல் மட்டும் பாட முடியும் என்று கோவப்பட்ட நடிகை ஆண்ட்ரியா...
கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டு நிலையில் லேசான தடியடி நடத்தி ரசிகர்களை கலையை செய்த காவல்துறையினர்....
சேலம் மல்லூர் வேங்காம்பட்டி கோயில் திருவிழாவின் கடைசி நாளில் திரை இசை கலை நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இதில் பிரபல தமிழ் சினிமா நடிகையும் பின்னணி பாடகியுமான ஆண்ட்ரியா அவர்கள் கலந்து கொள்வதாக பல்வேறு விளம்பரங்கள் செய்யப்பட்டிருந்தது இந்தநிலையில் நடன நிகழ்ச்சியை காண்பதற்கு கூடிய கூட்டத்தை விட ஆண்ட்ரியாவை காண்பதற்கு ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் குவிந்து காத்திருந்தனர் அப்பொழுது வெகு நேரம் காத்திருந்த ரசிகர்களுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் ஆண்ட்ரியா அவர்கள் வந்தார் அவரை காண அவரின் காரை சுற்றி நின்று கொண்ட ரசிகர்கள் காரை விட்டு இறங்க முடியாமல் தவித்த அன்றியா காவலர்கள் அனைவரையும் லேசான தடியடி நடத்தி கலைய செய்தபின்பு காரை விட்டு இறங்கி வந்தார்.
பின்பு மேடைக்கு வந்த ஆண்ட்ரியாவை ரசிகர்கள் ஆரவாரம் பொங்க விசிலடித்து நடனமாடி வரவேற்றனர் அதன் பிறகு அவர் பாடிய பிரபல பாடலான ஓ சொல்றியா மாமா பாடலைப் பாடிய நிலையில் ரசிகர்கள் ஆரவாரம் அளவில்லாமல் ஆர்ப்பரித்தது. பாடலை பாடி முடித்தவுடன் நடனமாட வேண்டும் என்று ரசிகர்கள் கத்திய நிலையில் கடுப்பான ஆண்ட்ரியா கோவத்துடன் நின்ற அவரை சக திரைப்படத்துறையினர் சமாதானம் செய்து மீண்டும் இன்னொரு பாடலைப் பாடி செல்வதாக கூறி மற்றொரு பாடலை நடிகை ஆண்ட்ரியா பாடினார் அப்பொழுது ரசிகர்கள் ஆரவாரம் அளவுக்கு அதிகமானதால் டிஎஸ்பி தலைமையிலான காவல்துறையினர் ரசிகர்கள் மீது லேசான தடியடி நடத்தி அவர்களுக்கு நிகழ்ச்சியை நிறுத்தி விடுவேன் என்று காவல்துறையினர் எச்சரித்த நிலையில் ரசிகர்களின் ஆரவாரம் அமைதியானது இதனையடுத்து அப்பகுதியில் இருந்து நடிகை ஆண்ட்ரியா கிளம்பினார் ஆண்ட்ரியாவை காண்பதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூட்டம் கூடியதால் அப்பகுதி பெரும் பரபரப்புடன் காணப்பட்டது.