திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடியில் பிரசித்திபெற்ற திருஞானசம்பந்தரால் தேவாரப் பாடல்பெற்ற ஆபத்சகாயேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த ஆலயத்தில் குருபகவானுக்கு தனி சன்னதி இந்த ஆலயம் நவக்கிரகங்களில் உள்ள குருபகவானுக்கு பரிகார தலமாக விளங்குகிறது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் குரு பெயர்ச்சி விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான குரு பெயர்ச்சி விழா வருகிற 14-ஆம் தேதி வியாழக்கிழமை நடக்க இருக்கிறது. அன்று விடியற்காலை 4.36 மணியளவில் குரு பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இதையொட்டி ஆலங்குடி குருபகவான் கோவிலில் குருபெயர்ச்சி விழா ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.