சேலம் மாநகராட்சி மன்றத்தின் அவசரக் கூட்டம் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது கூட்டம் தொடங்கியதும் மாநகர மேயர் ராமச்சந்திரன் சொத்து வரி தொடர்பான புதிய தீர்மானங்களை வாசிக்க ஆளும் கட்சி தலைவர் ஜெயக்குமாருக்கு உத்தரவிட்டார் இதனையடுத்து ஆளுங்கட்சி தலைவர் ஜெயக்குமார் தீர்மானத்தை வாசித்துக் கொண்டிருக்கும்போது அதிமுக உறுப்பினர்கள் சேலம் மாநகராட்சி புதிய சொத்து வரி உயர்வை கண்டிப்பதாகவும் தமிழக அரசின் சொத்து வரி உயர்வை கண்டித்து வெளிநடப்பு செய்வதாக் அறிவித்து மாநகராட்சி மற்றும் தமிழக அரசை கண்டித்து கோஷம் எழுப்பியபடி வெளியே வந்தனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது