மதுரவாயலில் பாஜக பிரமுகர் காருக்கு தீ வைத்து காரை கொளுத்தும் சிசிடிவி காட்சி வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து மதுரவாயல் போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த மதுரவாயல் போலீசார் வழக்கு பதிவு செய்து கட்சி ரீதியாக ஏதேனும் முன்விரோதம் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் சிசிடிவி காட்சியைய் கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.