#MRVNEWS #குளித்தலை அருகே முன்னாள் அமைச்சர் பாப்பாசுந்தரம் திருவுருவ சிலை திறப்பு | EPS பங்கேற்பு |

mrv news 2022-04-18

Views 6

#MRVNEWS #அதிமுக செய்திகளுக்காக | கரூர் மாவட்டம், குளித்தலை அருகே வளையப்பட்டியை சேர்ந்தவர் முன்னாள் அமைச்சர் பாப்பாசுந்தரம் (வயது 87). இவர் அதிமுக தொடக்க காலத்தில் இருந்து (1972 வருடம்) தன்னை அடிப்படை உறுப்பினராக இணைத்து கொண்டார். இவர் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தின் இரண்யமங்களம் ஊராட்சி மன்ற தலைவராகவும், எம். ஜி.ஆர் இறப்பிற்கு பின் அதிமுக ஜெ.அணி, ஜா.அணி என இரண்டாக பிளவு பட்டபோது 1989 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஜெ.அணி சார்பில் குளித்தலை தொகுதியில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

அதனைத் தொடர்ந்து அதிமுகவில் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தில் குளித்தலை ஒன்றியச் செயலாளராகவும், கரூர் மாவட்ட செயலாளராகவும், மாவட்ட அவைத் தலைவராகவும், மாநில கழக அமைப்புச் செயலாளராகவும் இருந்துள்ளார். இவர் குளித்தலை சட்டமன்ற தொகுதி சார்பில் நான்கு முறை எம்.எல்.ஏ.,வாகவும், 2005 -06 காலகட்டத்தில் ஆறு மாதங்கள் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்துள்ளார். இவர் கடந்த ஆண்டு உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார்.

முன்னாள் அமைச்சர் பாப்பாசுந்தரத்தின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி மற்றும் திரு உருவ சிலை திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பேசிய தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக கொண்டு வந்த திட்டங்களை ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS