#MRVNEWS #அதிமுக செய்திகளுக்காக | கரூர் மாவட்டம், குளித்தலை அருகே வளையப்பட்டியை சேர்ந்தவர் முன்னாள் அமைச்சர் பாப்பாசுந்தரம் (வயது 87). இவர் அதிமுக தொடக்க காலத்தில் இருந்து (1972 வருடம்) தன்னை அடிப்படை உறுப்பினராக இணைத்து கொண்டார். இவர் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தின் இரண்யமங்களம் ஊராட்சி மன்ற தலைவராகவும், எம். ஜி.ஆர் இறப்பிற்கு பின் அதிமுக ஜெ.அணி, ஜா.அணி என இரண்டாக பிளவு பட்டபோது 1989 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் ஜெ.அணி சார்பில் குளித்தலை தொகுதியில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து அதிமுகவில் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தில் குளித்தலை ஒன்றியச் செயலாளராகவும், கரூர் மாவட்ட செயலாளராகவும், மாவட்ட அவைத் தலைவராகவும், மாநில கழக அமைப்புச் செயலாளராகவும் இருந்துள்ளார். இவர் குளித்தலை சட்டமன்ற தொகுதி சார்பில் நான்கு முறை எம்.எல்.ஏ.,வாகவும், 2005 -06 காலகட்டத்தில் ஆறு மாதங்கள் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்துள்ளார். இவர் கடந்த ஆண்டு உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்தார். முன்னாள் அமைச்சர் பாப்பாசுந்தரத்தின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி மற்றும் திரு உருவ சிலை திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர்கள் எம்.ஆர்.விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் பேசிய முன்னாள் அமைச்சரும், கரூர் மாவட்ட அதிமுக செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், அதிமுக திட்டங்களை மறைத்தும், முற்றிலுமாக தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் எடுத்து வருகின்றார். அது மக்களுடைய திட்டங்கள், சாதாரணமாக, தாலிக்கு தங்கம் தரும் திட்டம், மறைந்த முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதா அவர்கள் கொண்டு வந்தது.இது ஏராளமான குடும்பங்களுக்கு உறுதுணையாக இருந்தது. ஆகவே மீண்டும் தேர்தல் வருவது உறுதி, அப்போது மீண்டும் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் ஆவது முற்றிலும் உறுதி என்றதோடு, விவசாய குடும்பத்தில் பிறந்த அவர், விவசாயிகளின் நண்பராகவும், ஏழைகளுக்கும் தோழனாகவும் விளங்குகின்றார் என்றும் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.