பிரதமர் மோடி மற்றும் மாநிலத்தலைவர் அண்ணாமலை ஆகியோரின் திருவுருவப்படத்தினை அழித்த திமுக வினர் விவகாரம் | அமைதியான முறையில் மனு கொடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை – திமுக வினரின் சுவர் விளம்பரத்தினை அழிக்க முயன்ற பாஜக வினர் சுமார் 300 க்கும் மேற்பட்டோர் கைது – திடீர் சாலைமறியல் மற்றும் நான்குவழிச்சாலைகளில் நான்குவழிகளிலும் சாலைமறியலில் பாஜக ஈடுபட்டதால் கரூர் ஸ்தம்பித்தது
கரூர் வடக்கு பிரதட்சணம் சாலையில் அமைந்துள்ள கரூர் வருவாய் கோட்டாட்சியர் அலுவலக சுற்றுச் சுவற்றில், கடந்த தமிழ்புத்தாண்டு அன்று சுவர் விளம்பரம் எழுதுவது தொடர்பாக ஏற்கனவே பாஜக இடம்பிடித்த சுவர் விளம்பரத்தின் மீது, அதுவும் பாஜக எழுதிய விளம்பரத்தின் மீது திமுக வினர் அழித்த சம்பவத்தினையடுத்து பாஜக – திமுக வினரிடையே மோதல் ஏற்பட்டது. இதனை அடுத்து காவல்துறையினர் உதவியுடனே, அதே சுவற்றில் இருந்த பாஜக சுவர் விளம்பரத்தை அழித்து விட்டு திமுகவினர் சுவர் விளம்பரம் எழுதினர். காரணம் கோவை மற்றும் சென்னையில் மட்டுமே உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி என்றாவது ஒரு நாள் கரூர் வந்தால் இங்கு எதிர்புறம் உள்ள பயணியர் மாளிகையில் தான் தங்குவார் ஆகவே திமுக வின் விளம்பரம் இருக்க வேண்டுமென்று காரணம் காட்டி திமுக சுவர் விளம்பரம் எழுதப்பட்டது. இது தொடர்பாக கரூர் மாவட்ட பாஜக சார்பில் மாவட்டத்தலைவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அன்று இரவே., கரூரில் பல்வேறு இடங்களில் பாஜகவினர் எழுதி இருந்த சுவர் விளம்பரங்களில் பாரத பிரதமர் மோடி, அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்களின் புகைப்படங்கள் கருப்பு பெயிண்ட் ஊற்றியும் அழிக்கப்பட்டது. இது தொடர்பாகவும் போலீசாரிடம் பாஜக சார்பில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், போலீசார் 3 நாட்களாக மேலாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத காரணத்தினால் பாஜக கரூர் மாவட்ட தலைவர் வி.வி.செந்தில்நாதன் தலைமையில், தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தில் எந்த வித அனுமதியும் வாங்காமல், எழுத்தப்பட்டிருந்த திமுகவின் சுவர் விளம்பரத்தை அழிக்கப் போவதாக தெரிவித்திருந்தனர். இது தொடர்பாக தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மாவட்ட பாஜக கட்சி அலுவலகத்தில் மாவட்ட தலைவர் செந்தில் நாதன் தலைமையில் சுமார் 500 க்கும் மேற்பட்டோர் திரண்டிருந்தனர். அப்போது, போராட்டத்தை கைவிடுமாறு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனை ஏற்க மறுத்த பாஜகவினர் திமுகவினரின் சுவர் விளம்பரத்தை அழித்தனர். பலரை தடுத்து நிறுத்திய போலீசார் அமைதி பேச்சுவார்த்தையை நடத்தினர். அப்போது கூட்டத்தில் இருந்த பாஜக நிர்வாகிகள், பாரத பிரதமர் மோடி அவர்களின் படத்தினை அழித்து விட்டு, திமுக வின் சுவர் விளம்பரம் ஒரு கேடா ? என்று கூறி இரண்டு நபர்கள் கருப்பு பெயிண்ட் டப்பாவை எடுத்துக் கொண்டு போய் திமுக சுவர் விளம்பரத்தில் ஊற்றி அழித்தனர். அவர்களை விரட்டிச் சென்ற போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர். போலீசாரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக மாவட்ட தலைவர் வி.வி.செந்தில்நாதன் அவர்களை விடுவிக்குபடி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மட்டுமே துணைபோகும் காவல்துறையினர் ஒழிக என்று கோஷம் போட்ட நபரால் பரபரப்பு ஏற்பட்டது மேலும் அப்போது அங்கு திரண்டிருந்த சுமார் 1200 க்கும் மேற்பட்ட பாஜகவினர் அலுவலகத்தில் இருந்து நடந்து சென்று கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் தரையில் அமைந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்