ராணிப்பேட்டை அடுத்த நவல்பூர் பேருந்து நிலையம் அருகே ராணிப்பேட்டை மாவட்ட அதிமுக கழகம் சார்பில் மே தின பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டம் ராணிப்பேட்டை மாவட்ட செயலாளரும் தமிழக எதிர்க்கட்சி சட்டமன்ற துணை கொறடா ரவி தலைமையில் நடைபெற்றது. தொழிலாளர்களுக்காக பல்வேறு நல வாரியம் மற்றும் திட்டங்களை அறிவித்த அரசு அதிமுக தலைமையிலான அரசு என்றும் ஆகையால் தொழிலாளர் தினத்தினை கொண்டாடுவதற்கான அனைத்து தகுதியும் அதிமுகவினருக்கு மட்டுமே உள்ளது என தெரிவிக்கப்பட்டது. கூட்டம் நடைபெற்று கொண்டிருந்த வேளையில் திடீரென மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் சட்டப்பேரவை துணை கொறடா ரவி மற்றும் அதிமுக கழக நிர்வாகிகள் மேடையிலிருந்து கீழே இறங்கி தமிழக அரசு மற்றும் மின்சார துறை அமைச்சரை கண்டித்து கோஷங்கள் எழுப்பியவாறு சென்னை ஆந்திர மாநிலம் செல்லும் நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்