திருவாரூர் நகரில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் நேற்று வரை மூன்று நாட்கள் தெப்ப திருவிழா நடைபெற்றது நேற்று தெப்பத் திருவிழாவிற்கு தற்காலிகமாக அமைக்கப்பட்ட கடைகளில் 3 நகராட்சி ஊழியர்கள் தனபால் ரவி தமிழ்ச்செல்வன் ஆகியோர் வசூல் வேட்டை நடத்தி உள்ளார்கள் அதனை ஒரு கடைக்காரர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பரவி விட்டுவிட்டார் . வசூல் வேட்டை நடத்திய தனபால் தமிழ்ச்செல்வன் ரவி மூவரும் பணியிடை நீக்கம் செய்து திருவாரூர் நகராட்சி ஆணையர் பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார் இந்த மூவரும் நகராட்சியில் துப்புரவு மேற்பார்வையாளர்கள் ஆக பணியாற்றி வருகிறார்கள்.