69.90 லட்ச ரூபாய் (எக்ஸ் ஷோரூம்) என்ற விலையில், பிஎம்டபிள்யூ ஐ4 இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுதான் இந்தியாவின் முதல் மிட்-சைஸ் பிரீமியம் எலெக்ட்ரிக் செடான் கார் ஆகும். இந்த காரின் பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 590 கிலோ மீட்டர்கள் பயணிக்க முடியும் என பிஎம்டபிள்யூ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த காரின் மோட்டார், 340 பிஹெச்பி பவரையும், 430 என்எம் டார்க் திறனையும் உருவாக்கும். இந்த கார், பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 5.7 வினாடிகளில் எட்டி விடும். புதிய பிஎம்டபிள்யூ ஐ4 கார் குறித்த விரிவான தகவல்களை தெரிந்து கொள்ள இந்த வீடியோவை பாருங்கள்.