தூத்துக்குடி அருகே உள்ள வல்லநாடு தனியார் பொறியியல் கல்லூரி விளையாட்டு மைதானத்தில் தமிழக அளவிலான ரக்பி போட்டி நடைபெற்றது. இதில் 11 மாவட்டங்களை சேர்ந்த 37 அணிகள் கலந்து கொண்டனர். இதில் 18 வயதிற்கு உட்பட்ட பெண்கள் பிரிவில் சென்னை அணியுடன் திருவள்ளூர் அணி மோதியது. பரபரப்பான ஆட்டத்தில் இறுதியில் திருவள்ளூர் அணி 10-0 என்ற புள்ளி கணக்கில் சென்னை பெண்கள் அணியை வீழ்த்தி முதல் பரிசை தட்டிச் சென்றது.