1. ஈசுவரனுக்குச் சமமாக அருளாற்றல் பெற்றவர்களுள் சனீசுவரர் விண்வெளியில் ஆட்சியிலும் #முனீசுவரர் மண்ணுலகில் ஆட்சியிலும் எத்தகைய மாற்றங்களையும் திருப்பங்களையும் தங்களது விருப்பம்போல் உருவாக்கும் ஆற்றல் உடையவர்கள்
2. உரிய #தமிழ்மொழி எழுத்துக்களாலும் சொற்களாலும் ஒலி எழுப்பி படையல்களுடன் பூசை செய்து விண்வெளி கண்காணிப்புச் சத்திகளைத் தங்களுக்கு சாதமாக்கிகொள்ள உதவுவதே சனீசுவரப்பூசை
3. இந்த சனீசுவரரின் பூசாவிதி மிகத்தெளிவாக அனைத்துவிதமான நாள் கோள் மீன் ராசி பாதிப்புகளுக்கும் பரிகாரமாக சொல்லப்படுகிறது
4. மேலும் எந்த விதமான பாதிப்புகள் இருப்பினும், சனீசுவர பாதிப்புகள் இருப்பினும், இந்த சனீசுவரக் காயந்திரி மந்தரத்தையும் சனீசுவரத் தோத்தரத்தையும் அன்றாடம் ஓதி வழிபடுவதால் தங்களுக்கு இருக்கின்ற சனீசுவரப் பாதிப்புகளைப் படிபடியாகக் குறைத்து தாங்களே தங்களுக்குப் பரிகாரத்தை செய்து கொள்ளமுடியம். சனீசுவரப் பூசையை பதினெண்சித்தர்களின் வழிவந்த குருவழியாக குருவின் வாழ்த்தோடும் அருளூரும் பூசனைப்பொருளோடும் செய்தால் விரைந்து பயனளிக்கும்.
5. சனீசுவர பாதிப்புள்ளவர்கள் அன்றாடம் மாலையில், எள்விளக்கேற்றி அல்லது மாமிசக் கொழுப்பு எண்ணையில் விளக்கேற்றி சனீசுவரரின் காயந்திரி மந்தரம் 48 முறை கூறி சனீசுவரனை வேண்டிக்கொள்ள வேண்டும்
6. இம்மந்தரத்தால், அருளுலகில் நல்ல செல்வாக்கும் பெறலாம்; பொருளுலகத் தொல்லைகளையெல்லாம் போக்கிக்கொள்ளலாம்
7. அங்கவியல் சாத்திர அடிப்படைகள் 32 ஆவதுபோல், விண்வெளியுலகில், இலக்கியமும்-இலக்கணமுமாக, உயிரும்-மெய்யுமாக, சொல்லும்-பொருளுமாக, சத்தியும்-சிவமுமாக, இரவும்-பகலுமாக உள்ள சனீசுவரர் 32 தோத்தர வரிகளால் பூசைசெய்யப்படுவது பதினெண்சித்தர்கள் கண்ட பூசாவிதி
8. இதை இசையோடும் சொல்லலாம்; எப்பொழுது வேண்டுமானாலும், இருக்கும் இடத்தில் இருந்த படிச் சொல்லலாம்
9. பாதிப்பு இல்லதவர்களும் கூறலாம்.
10. சொல்லும்போது எள்ளை ஒரு துணியில் முடிந்து, நல்லெண்ணையில் தோய்த்து, அகல் விளக்கில் எரித்திட வேண்டும்
11. இது எல்லாவிதமான பாதிப்புகளையும் அகற்றும்; எல்லாவித பாதுகாப்புகளும் கிடைக்கும்