தமிழகத்தின் இரண்டாவது திருநங்கை காவலர் நஸ்ரியா. தற்போது கோவை மாநகர காவலில் பணியில் இருக்கிறார். பல்வேறு சவால்களை கடந்து காவல் துறையில் பணியில் சேர்ந்த நஸ்ரியாவுக்கு இங்கேயும் சவால்கள் காத்திருந்தன. அத்தனையும் எதிர்கொண்டு பணியில் தொடர்ந்த இவர் அண்மையில், சாதி ரீதியாகவும் பாலியல் ரீதியாகவும் தனது மேலதிகாரி தன்னை துன்புறுத்துவதாக காவல் ஆணையரிடம் புகார் அளித்தார். அத்துடன் பணியிலிருந்தும் விலகப் போவதாகவும் அறிவித்தார்.
இவரது புகார் தொடர்பாக விசாரணை நடத்த கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ள நிலையில், காமதேனுவுக்காக நஸ்ரியாவைச் சந்தித்தோம். திருநங்கையாக மாறியது, பள்ளியில் படிக்கும் போதே ஆசிரியரை ஒருதலையாக காதலித்தது, கனவுகளைச் சுமந்துகொண்டு காவல் பணியில் சேர்ந்தது, எதிர்கால லட்சியம், இப்போது தனக்கு இருக்கும் அந்தக் காதல், பொது சமூகத்துக்கான வேண்டுகோள் என பல விஷயங்களை இந்த வீடியோவில் மனம்விட்டுப் பேசி இருக்கிறார் நஸ்ரியா.