மதுரையை சேர்ந்த புகழ்பெற்ற பட்டிமன்ற பேச்சாளரான சாலமன் பாப்பையா கடந்த அறுபது வருடங்களுக்கும் மேலாக தமிழ்த் துறையிலும்,பட்டிமன்றம் சார்ந்தும் இயங்கி வருகிறார். காமதேனு யூடியூப் தளத்திற்கு அளித்திருக்கக்கூடிய இந்தப் பேட்டியில் நடிகர் விவேக்கின் நினைவு தினமான இன்று அவரைப் பற்றி நினைவு கூர்ந்திருக்கிறார். அதுபோல, தன்னுடைய தமிழார்வம், சினிமாக்கள் குறித்து தன்னுடைய கருத்து, தற்போதுள்ள நடப்பு விஷயங்கள் என பலவற்றை பற்றியும் இந்த காணொலியில் பேசி இருக்கிறார்.