பெரியார் படத்தைப் பற்றி சில அபிப்பிராயங்களைச் சொல்லலாம் என்றுதான் உங்களை அழைத்தேன். நான் சொல்கிற யோசனைகளை நீங்கள் ஏத்துக்கணும்னு இல்லை. நிராகரிக்கவும் செய்யலாம்.
பெரியார் ஒரு மாபெரும் தலைவர். அவரை அறிமுகப்படுத்தும்போது இதைவிட இன்னும் பிரம்மாண்டமா இருந்திருக்கலாமோன்னு நான் நினைக்கிறேன்” என்றார். இதைக் கேட்ட ஞான ராஜசேகரன் ஒரு இயக்குநர் என்றமுறையில் அதற்கு விளக்கம் சொல்ல முற்பட்டார்.