கணவன் - மனைவி இருவரில் ஒருவர், பாலுறவை தவிர்ப்பது மனரீதியிலான கொடுமை! - டெல்லி நீதிமன்றம் தீர்ப்பு!

kamadenudigital 2023-07-04

Views 283

திருமணமானது முதலே பாலுறவை மனைவி தவிர்த்து வந்ததை காரணமாக்கி, கணவர் தரப்பில் விவாகரத்து கோரி வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதற்கு எதிராக வாதாடிய மனைவியின் தரப்பில், ’பாலுறவு என்றாலே அச்சத்துக்கு ஆளாகும் ஜீனோபோபியா மனைவிக்கு இருப்பதாக’ தெரிவிக்கப்பட்டது. ஆனபோதும் அவற்றை நிராகரித்த நீதிபதி, ”சுயமாக தனது கணவனை முடிவெடுத்த பெண், திருமணத்துக்கு முன்பாக 11 மாதங்கள் பழகி தெளிந்த பின்னரும், திருமணமான பிறகு வேண்டுமென்றே பாலுறவை தவிர்த்திருக்கிறார். இளம் தம்பதியர் மத்தியில் குடும்ப வாழ்க்கையில் பாலுறவு தவிர்க்க முடியாதது” என்று தெரிவித்தார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS