மட்டக்களப்பு,களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஓந்தாச்சிமடம்
ஆற்றில் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது தோணி கவிழ்ந்து காணாமல்போன இளைஞனின்
சடலம் இன்று மாலை மீட்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு ஓந்தாச்சிமடம் பகுதியில் உள்ள ஆற்றுப்பகுதியில் நேற்று இளைஞர்
ஒருவர் தோணியில் வலைவீசி மீன்பிடித்துக்கொண்டிருந்தபொது வலை வெள்ள நீரில்
இழுத்துச்செல்லப்பட்டபோது தோணி கவிழ்ந்துள்ளது.
இதன்போது நீரில் குறித்த இளைஞன் அடித்துச்செல்லப்பட்டதாக அப்பகுதி மக்கள்
தெரிவிக்கின்றனர்.