யாழ் போதனாவைத்தியசாலைக்குள் மோட்டார் சைக்கிளில் புகுந்து ரவுடி நடாத்திய திருவிளையடல்!! வீடியோ

vampan 2024-05-28

Views 11.2K

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவுக்குள் மோட்டார் சைக்கிளுடன் உள்நுழைந்த ரௌடியொருவன், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த வைத்தியசாலை உத்தியோகத்தர் மீது தாக்குதல் நடத்திய சம்பவமொன்று நேற்றையதினம் இடம்பெற்றுள்ளது.

தாக்குதலில் வைத்தியசாலை உத்தியோகத்தர் காயமடைந்ததுடன் தாக்குதல் நடத்திய ரௌடி கைது செய்யப்பட்டான்.

யாழ் போதனா வைத்தியசாலையின் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் நேற்று திங்கட்கிழமை இரவு 10 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றது.

வாள்வெட்டுக்கு இலக்காகி காயமடைந்த ஒருவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றியவாறு, மதுபோதையில் வந்த ரௌடியொருவன், விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுக்குள் மோட்டார் சைக்கிளில் நுழைந்து சிகிச்சையளிக்க கோரியுள்ளார்.

இதன்போது ஏன் மோட்டார் வண்டியில் உள்ளே வந்தீர்கள் என கேட்ட வைத்தியசாலை உத்தியோகத்தர் மீது மதுபோதையில் வந்த ரௌடி, அலுவலகம மேசை மீது இருந்த அச்சு இயந்திரத்தை தூக்கி தாக்கியுள்ளான்.

இதனையடுத்து அங்கு ஒன்றுகூடிய வைத்தியசாலை ஊழியர்கள் குறித்த ரௌடியை பிடித்து யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.

காயமடைந்த வைத்தியசாலை உத்தியோகத்தர் மற்றும் வாள்வெட்டில் காயமடைந்தவரும் சிகிச்சைக்காக வைத்தியசாலை விடுதியில் அனுமதிக்கப்பட்டனர்.

குறித்த சம்பவம் வைத்தியசாலை ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS