தர்மராஜா திரௌபதி அம்மன் திருக்கோயிலில் கோலாகலமாக நடைபெற்ற ஆடி மாத திருநடன உற்சவம்!

ETVBHARAT 2025-08-06

Views 12

தஞ்சாவூர்: ஆடித்திருவிழாவை முன்னிட்டு தர்மராஜா திரௌபதி அம்மன் திருக்கோயிலில் உள்ள ஸ்ரீ காயத்திரி காளியம்மன் சன்னதியில் ஆடி மாத திருநடன உற்சவம் இன்று சிறப்பாக நடைபெற்றது.

கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற திருக்கோயில்களில் ஒன்றான இலுப்பையடி தர்மராஜா திரௌபதி அம்மன் திருக்கோயிலில் உள்ள ஸ்ரீ காயத்திரி காளியம்மனுக்கு ஆண்டு தோறும் ஆடி மாதம் காப்பு கட்டி திருநடன உற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு கடந்த ஜூலை மாதம் 27ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஸ்ரீ காயத்திரி காளியம்மன் சன்னதியில் திருநடன திருவீதியுலா இன்று நாதஸ்வர மேளதாள மங்கல வாத்தியங்கள் முழங்க, திருக்கோயில் வளாகத்தில் இருந்து துவங்கியது. 

பிறகு, கோயிலில் இருந்து வெளியே வந்த அம்மனை, சன்னதி முன்பு சுற்றிலும் வட்டமாக கூடியிருந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஆனந்த நடனமாடியபடி வரவேற்றனர்.

லட்சுமி விலாஸ் தெரு, உப்புக்காரத்தெரு, ஆயிக்குளம் சாலை, ஹாஜியார் தெரு ஆகிய நான்கு வீதி சந்திப்பில் வீதியுலாவாக வந்த காளியம்மனை ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS