கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்து அசத்திய குழந்தைகள்!

ETVBHARAT 2025-08-14

Views 19

தஞ்சாவூர்: நாடு முழுவதும்  ஸ்ரீகிருஷ்ணனின் பிறந்த நாள் ஆவணி மாத அஷ்டமியில் கிருஷ்ண ஜெயந்தி விழாவாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி சனிக்கிழமை கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படவுள்ளது. அதனை முன்னிட்டு கும்பகோணத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் இன்று ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி விழா கோலாகலமாக நடைபெற்றது. 

இந்த விழாவில் ஸ்ரீ கிருஷ்ணரின் சிலைக்கு முன்பு லட்டு, வெண்ணெய், சீடை, முறுக்கு, அவல், பொறி, அதிரசம் போன்ற பல்வேறு விதமான பலகாரங்கள் வைத்து பூஜை செய்யப்பட்டது. இந்நிகழ்வில், 500க்கும் மேற்பட்ட சின்னஞ்சிறு பள்ளி குழந்தைகள், ஸ்ரீகிருஷ்ணர் மற்றும் ராதை வேடமணிந்து இருந்தனர்.

மேலும், பள்ளி மாணவ மாணவிகள் ஸ்ரீ கிருஷ்ணன் பாடல்களுக்கு நடனம் ஆடி அசத்தினர். அதனைத் தொடர்ந்து அனைத்து குழந்தைகளும் குழு நிழற்படங்கள் எடுத்துக் கொண்டனர். குறிப்பாக இந்த விழாவில், பல இஸ்லாமியக் குடும்பத்தினரும், ஆர்வமாக தங்கள் குழந்தைகளை ராதையாக, கிருஷ்ணராக வேடம் அணிவித்து பங்கேற்க செய்த காட்சிகளை பார்க்க முடிந்தது. ஒரே இடத்தில் 500-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்து மேடையில் வரிசையாக அணிவகுத்தது, அரங்கில் இருந்த அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. 

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS