விடுமுறை தினத்தை முன்னிட்டு திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்!

ETVBHARAT 2025-08-15

Views 10

தூத்துக்குடி: விடுமுறை தினத்தை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் வருகை தந்து இன்று சாமி தரிசனம் செய்தனர்.

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். திருச்செந்தூர் முருகன் கோயில் ஆன்மீக ஸ்தலம் மட்டுமல்லாமல் கடற்கரையோரம் உள்ளதால் சிறந்த சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது. இங்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கானோர் வருகை தருவார்கள். திருவிழா நாட்கள் மற்றும் விடுமுறை தினங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.

இந்த நிலையில் இன்று பொது விடுமுறை தினம் என்பதாலும், சுதந்திர தினம் என்பதாலும் அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் திருச்செந்தூரை நோக்கி படையெடுத்துள்ளனர். அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறந்ததில் இருந்து பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. பொது தரிசனம், 100 ரூபாய் கட்டண தரிசனம் மற்றும் மூத்த குடிமக்கள் தரிசன வரிசை என அனைத்திலும் பக்தர்கள் கூட்டம நிரம்பி வழிந்தது. அதுமட்டுமல்லாமல் இன்று விடுமுறை தினம் என்பதால் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் திருச்செந்தூருக்கு வருகை தந்தனர்.

இதனால் கோயில் முன்புள்ள கடற்கரை, நாழிக்கிணறு, கோயில் பிரகாரம் உள்பட அனைத்து பகுதிகளிலும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. எந்த நாளும் இல்லாத அளவுக்கு 100 ரூபாய் கட்டண தரிசனத்தில் கோயிலை சுற்றி மூன்று வரிசையில் பக்தர்களின் கூட்டம் காணப்பட்டது. அதிக அளவு கூட்டத்தின் காரணமாக சுமார் 6 மணி நேரத்திற்கும் மேலாக பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கிடையில் திருச்செந்தூர் கோயிலில் ஆவணி திருவிழாவில் இரண்டாம் நாளான இன்று கோயிலில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS