தவெக மாநாட்டில் 1000 நிருபர்கள் முகாமிட்டதன் ரகசியம் என்ன? TVK Madurai Maanadu

Oneindia Tamil 2025-08-21

Views 731

Tvk Manadu: தமிழக வெற்றிக் கழகத்தின் 2வது மாநில மாநாடு இன்று மதுரையில் நடைபெறுகிறது. மாநாட்டில் 10 லட்சம் தொண்டர்கள் வரை திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் ஊடகங்கள் தமிழக வெற்றி கழகத்தின் மாநாட்டுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கின்றன. ஒரு வாரத்திற்கு முன்பே பிரபல செய்தி சேனல்களின் நிருபர்கள் மதுரையில் முகாமிட்டு மாநாடு தொடர்பான செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். நேற்றிலிருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் முக்கிய செய்தியாளர்களை ஊடகங்கள் மதுரைக்கு அனுப்பி வைத்திருக்கிறது. குறைந்தபட்சம் ஒரு சேனலுக்கு 20லிருந்து 60 வரை தங்கள் செய்தியாளர்களை மாநாட்டு பணியில் ஈடுபடுத்தி இருக்கின்றனர். செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், அசைன்மென்ட், நேரலை தொழில்நுட்ப பணியாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் அங்கு குவிந்திருக்கின்றனர். அது மட்டும் அல்லாமல் யூட்யூப் சேனல்கள், இன்ஸ்டாகிராம் இன்ஃப்யன்ஸர்கள் என மீடியா என்று எடுத்துக்கொண்டால் 5000க்கும் மேற்பட்டவர்கள் அங்கு இருப்பார்கள் என்கின்ற தமிழக வெற்றிக் கழகத்தினர்.

#TVKMaduraiMaanadu #TVKVijay #tvkmanadulive #TamilagaVettriKazhagam #Tvk #TVKConference #தவெக #விஜய் #vijayspeech #parapathi #மதுரைமாநாடு #TVKmanaduplace #Tvkmadurai #Maduraimanadu

Also Read

TVK Madurai Maanadu LIVE: தவெக மதுரை மாநாடு.. குவிந்த தொண்டர்கள்.. விஜய் பேசப்போவது என்ன? :: https://tamil.oneindia.com/news/madurai/tvk-maanadu-madurai-tvk-madurai-manadu-live-news-updates-vijay-speech-highlights-announcements-729661.html?ref=DMDesc

TVK Madurai Manadu: 7 மணிக்கே முடியும் தவெக மாநாடு.. 45 நிமிடங்கள் மட்டுமே பேசும் விஜய்! டைம் டேபிள் திடீர் மாற்றம்! :: https://tamil.oneindia.com/news/madurai/tvk-madurai-manadu-vijay-s-tvk-second-state-conference-2025-madurai-event-schedule-changed-heavy-729651.html?ref=DMDesc

மதுரை தவெக மாநாட்டில் விஜய் உடைக்கும் சீக்ரெட்! போட்டியிடும் தொகுதி பற்றி அறிவிக்க வாய்ப்பு! :: https://tamil.oneindia.com/news/madurai/vijay-to-break-his-silence-at-madurai-tvk-conference-possible-announcement-on-contesting-constituen-729585.html?ref=DMDesc



~ED.67~

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS