சாலையில் நெல்லை கொட்டி போராட்டத்தில் குதித்த விவசாயிகள்... தேனியில் பரபரப்பு!

ETVBHARAT 2025-09-09

Views 1

தேனி: அரசு கொள்முதல் செய்யாத நெல்லை சாலையில் கொட்டி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெரியகுளம் அருகே மேல்மங்கலம் கிராமத்தில் 1000-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் இரண்டாம் போக நெல் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. அறுவடை செய்யப்பட்ட நெல்லை, அந்த பகுதி விவசாயிகள் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக, மேல்மங்கலம் கிராமத்தில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் கொட்டி வைத்திருந்தனர். 

இந்த நிலையில், கொள்முதல் நிலையத்தில் உள்ள குறைந்த அளவிலான நெல்லை மட்டுமே அரசு கொள்முதல் செய்துள்ளதாகவும், பெரும்பாலான விவசாயிகளிடம் இருந்து நெல்லை வாங்கவில்லை எனவும் கூறப்படுகிறது. பாதுகாக்கப்பட்டு வந்த நெல் சேதமடைந்து காணப்படுவதாகக் கூறி, நெல் கொள்முதல் நிலைய அதிகாரிகள் வாங்க மறுத்துள்ளனர்.

இதனை கண்டிக்கும் விதமாக விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை, டிராக்டர் மூலம் எடுத்துச் சென்று பெரியகுளம் சாலையில் கொட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மேலும், தமிழ்நாடு வாணிப கழக மேலாளர் நெல்லை கொள்முதல் செய்ய முடியாது என்று கூறியதாலே போராட்டத்தில் இறங்கியுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

இது குறித்து தனித் என்ற விவசாயி கூறுகையில், “இந்த ஆண்டு விவசாயிகளிடம் இருந்து முறையாக நெல் கொள்முதல் செய்யப்படவில்லை. கடந்த ஆண்டு நெல் போதுமான அளவு கிடைக்காமல் இருந்தது. தற்போது நெல் அதிகம் கிடைத்தும், அதனை கொள்முதல் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.

விவசாயத்தை விட்டு அனைவரும் வெளியேறும் சூழலில், என்னை போல் சிலர் தான் விவசாயம் செய்து வருகிறோம். இந்நிலையில், வியாபாரிகளுக்கு ஆதரவாக செயல்படும் அரசு, விவசாயிகளின் நெல்லை கொள்முதல் செய்யாமல் கிடப்பில் போட்டுள்ளது” என்று குற்றம்சாட்டினார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS