தேமுதிக பொது செயலாளர் பிரேமலதா விஜயகாந்தின் தாயார் காலமானார்! தர்மபுரியில் இருந்து கண்ணீருடன் புறப்பட்டார் பிரேமலதா.

ETVBHARAT 2025-10-07

Views 4

தர்மபுரி: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவின் தாயார் அம்சவேணி (83) வயது மூப்பு காரணமாக இன்று காலமானார்.

தர்மபுரியில் தேமுதிக சார்பில் நேற்று திங்கட்கிழமை நல்லம்பள்ளி மற்றும் பாளையம் புதூர் பகுதியில் 'உள்ளம் தேடி இல்லம் நாடி' சுற்றுப்பயண பொது கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட தேமுதிக பொதுசெயலாளா் பிரேமலதா விஜயகாந்த் உரையாற்றினார்.

நேற்று இரவு தர்மபுரியில் தங்கி இன்று ஈரோடு மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருந்த நிலையில் இன்று காலை 7:30 மணியளவில் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் தாயார் அம்சவேணி (83) வயது மூப்பு காரணமாக காலமான செய்தி அறிந்து பின்பு அவர் தர்மபுரியில் இருந்து திருவள்ளுர் மாவட்டம் செம்பேடு கிராமத்திற்கு புறப்பட்டு சென்றார். அப்போது தங்கி இருந்த விடுதியில் இருந்து கண்ணீரோடு பிரேமலதா விஜயகாந்த் மற்றும் சுதீஷ் இருவரும் புறப்பட்டு சென்றனர். தேமுதிக நிர்வாகிகள் அவருக்கு ஆறுதல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து, பிரேமலதா விஜயகாந்தின் தாயார் மறைவுக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS