ஒரே நாளில் 3,500 மாணவிகளுக்கு ஹீமோகுளோபின் பரிசோதனை: வரலாறு படைத்த விழிப்புணர்வு முகாம்!

ETVBHARAT 2025-10-10

Views 4

வேலூர்: தனியார் கல்லூரியில் ஒரே நாளில் 3,500 மாணவிகளுக்கு ஹீமோகுளோபின் பரிசோதனை செய்யப்பட்டு புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டத்தின் காட்பாடி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் ரத்த சோகை (Anemia) குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில் மிகப்பெரிய ரத்த பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாம், இந்தியா மற்றும் ஆசியா சாதனை புத்தகங்களில் இடம் பெறும் வகையில், ஒரே நாளில் ஒரே இடத்தில் 3,500 மாணவிகளுக்கு மூன்று மணி நேரத்திற்குள் ஹீமோகுளோபின் பரிசோதனை செய்யப்பட்டது.

இந்த சிறப்பான நிகழ்வு, அக்சிலியம் கல்லூரியின் தேசிய நலப்பணிகள் திட்ட (NSS) 50-ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, தனியார் மருத்துவமனையின் ஒத்துழைப்புடன் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் சுப்பு லெட்சுமி தலைமை தாங்கினார். தொடர்ந்து மருத்துவமனையின் நிறுவனர் டாக்டர் சம்பத், மாணவிகளின் ஆரோக்கியத்தை முன்னிலை படுத்துவது காலத்தின் தேவை எனக் குறிப்பிட்டார். 

மாணவிகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், ரத்த சோகை பிரச்சனை குறித்து விழிப்புணர்வுடன் செயல்பட வழிவகுக்கும் வகையில் நடத்தப்பட்ட இந்த முகாம் மாணவர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. 

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS