உலக நீரிழிவு நோய் தினம்: விழிப்புணர்வு படங்கள் வரைந்து மாணவர்கள் அசத்தல்!

ETVBHARAT 2025-10-18

Views 4

வேலூர்: உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வேலூரில் மாணவர்களுக்கு பல்வேறு பேட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.

ஆண்டுதோறும் உலக நீரிழிவு நோய் தினம் நவம்பர் 14ஆம் தேதி கடைப்பிடிக்கப்படுகிறது. அதனை முன்னிட்டு பல்வேறு தரப்பினரும் நீரிழிவு நோய் குறித்து பெரியவர்கள் முதல் மாணவர்கள் வரை அனைவரிடத்திலும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். 

அந்த வகையில் இன்று வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி மருத்துவமனை (CMC) சார்பில் பள்ளி மாணவர்களுக்கு நீரிழிவு நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. அதில்  “இன்றைய ஆரோக்கியம் பழங்களில், நாளைய நல் வாழ்விற்கு" என்ற தலைப்பில் கட்டுரை போட்டியும், "நவீன தொழில்நுட்பமும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கான கட்டமைப்பும்" என்ற தலைப்பில் ஓவியப்போட்டியும் நடத்தப்பட்டது. தொடர்ந்து வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 

இந்த நிகழ்ச்சியில் நீரிழிவு நோய் நிபுணர் மருத்துவர் நிகில் தாமஸ், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஆரோன் சேப்லா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உரையாற்றினர். 

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS