காஞ்சிபுரத்தில் பழனி ஆண்டவர் கோயிலில் கந்த சஷ்டி விழா: பால்குடம் எடுத்து பக்தர்கள் வழிபாடு!

ETVBHARAT 2025-10-26

Views 5

காஞ்சிபுரம்: பழனி ஆண்டவர் கோயிலில் கந்த சஷ்டி பெருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

முருகன் கோயில்களில் கந்த சஷ்டி விழா கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் காஞ்சிபுரம் மேற்கு ராஜ வீதி பழனி ஆண்டவர் முருகன் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் கந்த சஷ்டி விழா வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். சஷ்டி விரதம் தொடங்கியதால் காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த முருக பக்தர்கள் ஏராளமானோர் பழனி ஆண்டவர் முருகன் கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

கந்த சஷ்டி திருவிழாவின் ஐந்தாவது நாளான இன்று மேற்கு ராஜ வீதியில் அமைந்துள்ள ஒத்தவாடை தெருவில் உள்ள அமரேசுவரர் திருக்கோயிலில் இருந்து 108 பெண்கள் பால்குடம் எடுத்தனர். மேற்கு ராஜவீதி, கச்சபேஸ்வரர் கோயில், சங்கர மடம், ஏகாம்பரநாதர் சன்னதி வீதி என முக்கிய நகர வீதிகள் வழியாக பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் தலையில் பால்குடம் ஏந்தி வந்து பழனி ஆண்டவரை வழிபட்டனர்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS