மனநலம் பாதிக்கப்பட்ட மாணவர்களுடன் நடனமாடி மகிழ்ந்த முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு

ETVBHARAT 2025-12-23

Views 0

சென்னை: மனநலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மனதை உற்சாகப்படுத்தும் விதமாக நடிகர் விஜய்யின் 'நா ரெடி தான் வரவா' பாடலுக்கு அவர்களுடன் முன்னாள் டி.ஜி.பி சைலேந்திரபாபு நடனம் ஆடி மகிழ்வித்தார்.

பசுமை மற்றும் ஆரோக்கியமான எதிர்காலத்தை வலியுறுத்தி தமிழ்நாடு சைக்கிள் ஓட்டுதல் சங்கம் மற்றும் எலிஃபண்டைன் சர்க்யூட் இணைந்து நடத்திய சைக்ளோத்தான் போட்டி, அடையாறு பகுதியில் தொடங்கியது. இந்த போட்டியை ஓய்வு பெற்ற டி.ஜி.பி சைலேந்திர பாபு எலிஃபண்டைன் நிர்வாக இயக்குநர் ரமணன் பாலகங்காதரன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

இந்த போட்டியில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் 8 மாத கர்ப்பிணிப் பெண் தனது கணவருடன் டேன்டெம் பைக்கில் பங்கேற்றார். சென்னை முழுவதும் சுமார் 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இந்த போட்டியில் பங்கேற்றனர்.  அடையாறு பகுதியில் தொடங்கிய இந்த போட்டி முக்கிய நகரங்கள் வழியாக 28 கிலோமீட்டர் கடந்து கேளம்பாக்கம் அடுத்த மாம்பாக்கம் பகுதியில் முடிவுற்றது.

மனநலம் பாதிக்கப்பட்ட 35 மாணவர்கள் இந்த சைக்ளோத்தான் போட்டியில் கலந்து கொண்டனர். அவர்களை உற்சாகப்படுத்தும் விதமாக 'நான் ரெடி தான் வரவா' என விஜய் பாடலுக்கு அவர்களுடன் முன்னாள் டி.ஜி.பி சைலேந்திரபாபு நடனம் ஆடி மகிழ்வித்தார்.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS