Nee Kaatru Naan Maram HQ..PAKEE Creation

Views 6

நீ காற்று நான் மரம் என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்

நீ காற்று நான் மரம் என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்
நீ மழை நான் பூமி எங்கு விழுந்தாலும் ஏந்திக்கொள்வேன்
நீ இரவு நான் விண்மீன் நீயிருக்கும் வரைதான் நான் இருப்பேன்

(நீ காற்று)

நீயலை நான் கரை என்னை அடித்தாலும் ஏற்றுக்கொள்வேன்
நீ உடல் நான் நிழல் நீ விழ வேண்டாம் நான் விழுவேன்
நீ கிளை நான் இலை உனை ஒட்டும் வரைக்கும்தான் உயிர் தறிப்பேன்
நீ விழி நான் இமை உன்னை சேரும்வரைக்கும் நான் துடித்திருப்பேன்
நீ சுவாசம் நான் தேகம் நான் உன்னை மட்டும் உயிர்தொட அனுமதிப்பேன்

(நீ காற்று)

நீ வானம் நான் நீலம் உன்னில் நானாய்க் கல்ந்திருப்பேன்
நீ எண்ணம் நான் வார்த்தை நீ சொல்லும் பொழுதே வெளிப்படுவேன்
நீ வெயில் நான் குயில் உன் வருகை பார்த்துத்தான் நானிசைப்பேன்
நீ உடை நான் இடை உன்னை உறங்கும்பொழுதும் நான் உடுத்திருப்பேன்
நீ பகல் நான் ஒளி என்றும் உன்னை மட்டும் சார்ந்தே நானிருப்பேன்...

Share This Video


Download

  
Report form