(30/07/1953 -> 18/09/2008)" />
(30/07/1953 -> 18/09/2008)"/>
(30/07/1953 -> 18/09/2008)">

Engal Ammaa - B.Uthayakumary - Pitivu, 05 - Thokuppu : Yaal / Nallur B U . Bala - 87280 Limoges - France

Views 1

* " Engal Ammaa Amarar : B.Uthayakumary "...!!! - Pitivu, 05

(30/07/1953 -> 18/09/2008)

- Thokuppu : Yaal / Nallur B U . Bala

87280 Limoges

France

* " என் அம்மா என்னை ஈன்றவளே "...!!!

" என் அம்மா என்னை ஈன்றவளே
கவிதைகளில் உனை வடிக்க
வார்த்தைகள் இல்லை என்னிடம்
காதலை கவிதைகளாக சொல்ல
ஒரு சில பொய்கள் போதும் அம்மா...!!!

" அம்மா என் உயிரின் மூலமே
உன் பெருமை சொல்ல
இன்னொரு யுகமும் சேர்ந்து
பிறக்க வேண்டும் நான்...!!!

" என் அம்மா பாஷைகளின் அழியாத மொழியாக
அன்பு என்னும் வார்த்தையில்
அர்ச்சனை மந்திரமாக
அறிவையூட்டும் ஆசானியாக
இருந்திருக்க வேண்டிவளே
என்னை தவிக்க விட்டுச் சென்றதேனம்மா?...!!!

" என் அம்மா நீ இல்லாத இவ்வலகில்
நான் படும் அவஸ்தைகள்
அறியாயோ அம்மா?...!!!

" என் அம்மா பாசம் என்னும் ஒரு வார்த்தைக்காக
பல படிகள் ஏறி தோற்றுவிட்டேன்
என்நிலை அறிந்து ஆறுதல்
சொல்ல யாருமில்லை அம்மா எனக்கு...!!!

" என் அம்மா பாசம் என்னும் பேரில்
வேசம் காட்டும் பல ஆத்மாக்கள்
இவ்வுலகில் இருக்கத்தான் செய்கிறார்கள்
இருந்தும் அம்மா உன் அன்புக்கு
ஈடு இணை யார் இவ்வுலகில்...!!!

" என் அம்மா என்னால் முடியவில்லை
என்னை அரவணைத்து கொள் உன்னுடன்
சொர்க்கமான உன்னுடன்
சொர்க்கத்திலாவது ஒன்றாக
வாழ்வோம் அம்மா நிரந்தரமாக...!!!

- உன் பிள்ளை

பா உ . பாலா

* " அம்மா என் தாயே "...!!!

" அம்மா என் நினைவில் உன் முகம்
மறந்தேன் - தாயே
கனவிலாவது வந்துவிடு என் தாயே...!!!

" அம்மா மீண்டும் ஒருமுறை
வாழ்ந்திட வேண்டும்...!!!

" அம்மா உன் மடியில் எனக்கு
மரணமும் வேண்டும்...!!!

" அம்மா உன் கைகள் பிடித்து நடந்த
காலங்கள் மறந்தேன் என் தாயே...!!!

" அம்மா என் கண்ணீர் துடைத்த
உன் கைகளை இழந்தேன் என் தாயே...!!!

" அம்மா எத்தனை பிறவிகள் நான்
எடுப்பினும் அத்தனை பிறவியும்
நீயே என் தாயாக வந்துவிடு...!!!

" அம்மா ஆண்டுகள் ஜந்து ஆகியும்
கூட நேற்று வாழ்ந்தாற்போல்
இன்னும் என் நெஞ்சில் உன்
பல நினைவுகள் என் தாயே...!!!

" அம்மா வீட்டு முற்றத்தில்
நிலாச் சோறு...!!!

" அம்மா உன் பட்டு மடியில்
தாலாட்டு...!!!

" அம்மா தம்பி, பெரியவன், செல்லம் என்ற
உன் அணைப்பு...!!!

" அம்மா சில சமயம் - நீ
அருகிலிருப்பதாய்
உணர்கிறேன் என் தாயே - என்
கண்கள் திறக்க மறுக்கின்றேன்...!!!

" தாயே...!!! " பெற்றவள் உன்
தூய அன்புக்கு நிகர் யார் இவ்வுலகில் என் தாயே...!!!

- உன் பிள்ளை

பா உ . பாலா

Share This Video


Download

  
Report form