- மீழ் தொகுப்பு" />
- மீழ் தொகுப்பு"/>
- மீழ் தொகுப்பு">

Tamilar Thiru Naal - Tamil Eelam Yaal Nallur B.Bala - 87280 Limoges, France

Views 1

* "Tamilar Thiru Naal Tamil Thaip Pongal"...!!!

- மீழ் தொகுப்பு : ஈழம் யாழ் / நல்லூர் பா.பாலா

87280 லீமோஸ்

பிரான்ஸ்

* " பொங்குவோம்...! "பொங்குவோம்...! "தமிழீழ விடுதலைப் பொங்கல் "...!!!

01, சுறவம் (தை) 2044 » (01.01.2044) » 14.01.2013

* " பொங்குவோம்...! "பொங்குவோம்...! "தமிழீழ விடுதலைப் பொங்கல் "...!!!

" பன்னாட்டுப் பாவியர் குத்திய
பயங்கரவாத முத்திரைக்
குப்பை தனைப் பெருக்கி
தமிழீழத் தேசியக் கோலமிட்டு
பொங்குவோம் பொங்குவோம்
தமிழீழ விடுதலைப் பொங்கல் பொங்குவோம்...!

" தமிழீழத் தாயகத் தாக அரிசியெடுத்து
துரோகமெனும் கல் நீக்கி
ஒற்றுமைப் பால் வார்த்து
புலமென்னும் பானையிலே - துணிந்தெழுந்து
பொங்குவோம் பொங்குவோம்
தமிழீழ விடுதலைப் பொங்கல் பொங்குவோம்...!

" தமிழீழ வேட்கை பட்டாசாக
தன்மானத் தமிழீழத் தேன் சேர்ந்து
தளரா மனக் கரும்பஞ் சாறூற்றி
வீரத் தீ மூட்டி தியாகக் கனி கூட்டி
பொங்குவோம் பொங்குவோம்
தமிழீழ விடுதலைப் பொங்கல் பொங்குவோம்...!

" வழியிங்கு பிறந்ததென - ஞாயிறு
ஒளியிங்கு வந்ததென
வஞ்சகர் மறைந்தனர் என
தமிழீழ எதிரிகள் எங்கோ ஒளிந்தனரென - மார்தட்டிப்
பொங்குவோம் பொங்குவோம்
தமிழீழ விடுதலைப் பொங்கல் பொங்குவோம்...!

" எம் தமிழீழ ஆழ்கடலும் நீள் நிலமும் நம் வசமாக வளமாக
வாடும் மனங்கள் இசை பாடும் மீன்களாக
தமிழீழ நாடும் நலமாக யாழிசைக்க - தோள்தட்டிப்
பொங்குவோம் பொங்குவோம்
தமிழீழ விடுதலைப் பொங்கல் பொங்குவோம்...!

" கொதிப்பது தமிழீழத் தமிழர் மனமாக
உதிப்பது எம் கதிராக - நெஞ்சில்
பதிப்பது அழியா எம் புலி மாவீரிகளாக, எம் புலி மாவீரர்களாக
மதிப்பது எம் தமிழீழத் தாய்த் தமிழாக - திரண்டு கூடிப்
பொங்குவோம் பொங்குவோம்
தமிழீழ விடுதலைப் பொங்கல் பொங்குவோம்...!!!

* " பொங்கல் பொங்கல் தமிழீழ விடுதலைப் பொங்கல்...!!!

* " பொங்கலோ பொங்கல் தமிழீழ விடுதலைப் பொங்கல்...!!!

* " பொங்கலோ பொங்கல் எம் தானைத் தலைவனின் வீரத்தில் தமிழீழ விடுதலைப் பொங்கல்...!!!

* " பொங்கலோ பொங்கல் எம் தமிழீழ விடுதலைப் புலிகளின் வீரத்தில் தமிழீழ விடுதலைப் பொங்கல்...!!!

* " பொங்கலோ பொங்கல் எம் தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலிகள் வீரத்தில் தமிழீழ விடுதலைப் பொங்கல்...!!!

* " பொங்கலோ பொங்கல் எம் தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் புலிகள் வீரத்தில் தமிழீழ விடுதலைப் பொங்கல்...!!!

* " பொங்கலோ பொங்கல் எம் தமிழீழ விடுதலைப் புலிகளின் கடல் புலிகள் வீரத்தில் தமிழீழ விடுதலைப் பொங்கல்...!!!

* " பொங்கலோ பொங்கல் எம் தமிழீழத் தாயக மக்களின் வீரத்தில் தமிழீழ விடுதலைப் பொங்கல்...!!!

* " பொங்கலோ பொங்கல் எம் தமிழீழத் தாயக விடுதலையின் விடுதலைப் பொங்கல்...!!!

- பா.பாலா

"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"

Share This Video


Download

  
Report form