பேச்சுப்போட்டி TNTJ துபை.

satwa tntj 2013-02-27

Views 38

துபை மண்டலம் தழுவிய பேச்சுப் போட்டி!
துபை: அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டலம் சார்பாக 01.02.2013 அன்று புதிய அழைப்பாளர்களை உருவாக்கும் மற்றும் ஊக்குவிக்கும் விதமாக துபை மண்டலம் தழுவிய மாபெரும் பேச்சுப் போட்டி மண்டல தலைவர் சகோ.முஹம்மது அலி தலைமையிலும் மற்றும் மெளலவி.முஹம்மது ரியாஸ் MISC மற்றும் மண்டல நிர்வாகிகள் ஆகியோரின் முன்னிலையிலும் தேய்ரா தலைமை மர்கசில் நடைப்பெற்றது.

இதில் துபை மண்டலத்தின் பல்வேறு கிளைகலிருந்தும் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

கீழ்கண்ட மூன்று தலைப்புகள் கொடுக்கப்பட்டது பேச அழைப்பு விடுக்கப்பட்டது.
அழைப்பு பணியின் அவசியம்
மறுமை வெற்றி யாருக்கு?
நவீன பிரச்சனைகளுக்கு இஸ்லாம் வழங்கும் தீர்வு!
காலை 9:30 மணியிலிருந்து மதியம் 12:30 வரை நடைப்பெற்ற பேட்டியில் 12 நபர்கள் கலந்து கொண்டு பேசினர்.

பிறகு ஜும்மா தொழுகை மற்றும் மதிய உணவு இடைவெளிக்கு பிறகு பரிசளிப்பு மற்றும் நிறைவுரை சகோ.ஹாமீன் இபுராஹிம் அவர்களால் வழங்கப்பட்டது.

வந்திருந்த அனைத்து சகோதரர்களுக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.

முதல் மூன்று பரிசுகள் பெற்றவர்களின் விபரம்:-

முதல் பரிசு - அப்துல் ஹமீது [சோனாப்பூர் கிளை]

இரண்டாம் பரிசு - யூசுப் ரபீக் [தேய்ரா கிளை]

மூன்றாம் பரிசு - அமீருத்தீன் [சத்வா கிளை]
மேலும் கலந்து கொண்ட அனைத்து சகோதரர்களுக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டது.

இதில் மண்டலத்தின் அனைத்து கிளைகலிருந்தும் திரளான கொள்கை சகோதரர்கள் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!

Share This Video


Download

  
Report form