மதுரை மருத்துவக் கல்லூரியில் இரண்டாமாண்டு எம்பிபிஎஸ் படித்து வந்த மாணவன் விடுதியில் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை: மதுரை மருத்துவக் கல்லூரியில் மாணவர் மர்மமானமுறையில் இறந்துள்ளார். அவர் கொலை செய்யப்பட்டாரா அல்லது தற்கொலை செய்துகொண்டாரா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மருத்துவக் கல்லூரியில் முகமது ஷா என்ற மாணவர் இரண்டாம் ஆண்டு எம்பிபிஎஸ் படித்து வருகிறார். இவர் கேரள மாநிலம் கொல்லத்தூரைச் சேர்ந்தவர். மதுரை மருத்துவக் கல்லூரியின் ஆண்கள் விடுதியில் தங்கியுள்ளார்.
இந்நிலையில், முகமது ஷா நேற்று முன்தினம் இரவு மூன்றாவது மாடியில் செல்போனில் பேசிக்கொண்டிருந்தார்.
அதன்பிறகு அவர் அவருடைய அறைக்குத்
திரும்பவேயில்லை. காலையில் பார்த்தபோது அவர் விடுதி வாளாகத்தில் தரையில் சடலமாகக் கிடந்துள்ளார்.இதுகுறித்து காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து விரைந்து வந்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முகமது ஷாவின் தலையிலும் தொண்டையிலும் காயங்கள் உள்ளது. காவல்துறையினர் இந்த மரணம் கொலையா தற்கொலையா என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
Madurai medical college student Mohammed sha died in hostel
premises. Police inquiring whether it is murder or suicide
For More Updates Follow Us On
Get Instant News Updates
http://tamil.oneindia.com/
Get Latest Entertainment Updates
http://tamil.filmibeat.com/
Subscribe To Oneindia Tamil YouTube Channel For Unlimited Videos
https://www.youtube.com/user/OneindiaTamil
Follow Us On G+
https://plus.google.com/+OneindiaTamil
Like Us On Facebook
https://www.facebook.com/oneindiatamil
Follow Us On Twitter
https://twitter.com/thatsTamil
Download Our Oneindia Tamil Android App
https://play.google.com/store/apps/detailsid=in.oneindia.android.tamilapp
Download Our Oneindia Tamil iTunes App
https://itunes.apple.com/us/app/oneindia-tamil-news/id617925711