'இந்த தரங்கெட்ட செயல் அரசியலில் அவர்களுக்குப் பின்னடைவைத்தான் ஏற்படுத்தும்' எனப் பேசியுள்ளார் நடிகர் அருள்தாஸ்.
சுசீந்திரன் இயக்கத்தில் 'மாநகரம்' சந்தீப், விக்ராந்த் ஆகியோர் நடிக்கும் 'நெஞ்சில் துணிவிருந்தால்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
இந்த விழாவில் பேசிய நடிகர் அருள்தாஸ் மத்திய அரசையும், பா.ஜ.க-வினரையும், திரையுலகினரை ஒடுக்க நினைப்பவர்களையும் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
"ஜாதி, மதம் ஆகியவை இல்லாத துறை சினிமாத்துறை. சமீபமா எதையாவது பேசினா ஜாதியை இழுத்துடுறாங்க. இப்ப 'மெர்சல்' படத்தில் விஜய் பேசின வசனங்களுக்காக அவர் மதத்தையும் இழுத்து ட்விட்டர்ல போடுற அளவுக்கு கேவலமான முறையைக் கையாள ஆரம்பிச்சிட்டாங்க அரசியல்வாதிகள்.
Actor Aruldoss has criticized the central government, the BJP and the people who want to suppress the film industry. Actor Aruldoss has said, "This lucid action will only cause a reversal in politics."