இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றியை நோக்கி முன்னேறிக்கொண்டு இருக்கிறது. இந்திய வந்துள்ள நியூசிலாந்து அணி மூன்று ஒருநாள் போட்டியிலும் மூன்று டி20 போட்டியிலும் விளையாடி வருகிறது . இதில் முதல் ஒருநாள் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது அதில் நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது . இந்த நிலையில் இரு அணிகளும் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி புனேவில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி இந்தியாவிற்கு 231 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது அடுத்து காலம் இறங்கிய இந்திய அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றது