முதல் டி20 போட்டி ... வெற்றியை தொடருமா இந்திய அணி ?- வீடியோ

Oneindia Tamil 2017-12-20

Views 8.8K


இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் முதல் டி-20 போட்டி இன்று ஒடிசா மாநிலம் கட்டாக்கில் உள்ள 'பாரப்பட்டி' மைதானத்தில் நடக்கிறது. இந்த போட்டி சரியாக மாலை 7 மணிக்கு தொடங்கும். இலங்கை அணி இந்தியாவிற்கு 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரை விளையாட வந்து இருக்கிறது. இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா 1-0 என்று கணக்கில் தொடரை வென்றது

இந்திய கேப்டன் கோஹ்லி திருமணத்திற்காக ஓய்வில் இருப்பதால் ரோஹித் சர்மா கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் இந்தியா ஒருநாள் தொடரை 2-1 என்று கணக்கில் வென்றது. இந்த நிலையில் இந்தியா இலங்கை மோதும் மூன்றாவது முதல் டி20 போட்டி இன்று கட்டாக்கில் நடக்கிறது. இந்த போட்டிக்காக இந்திய அணியில் புதிய வீரர்கள் பலர் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள். அதன்படி இந்திய அணியில் ரோஹித் சர்மா, டோணி, லோகேஷ் ராகுல், ஷ்ரேயஸ் ஐயர், தினேஷ் கார்த்திக், மணிஷ் பாண்டே, ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், பும்ரா, சாஹல், முகமது சிராஜ், தீபக் ஹூடா, ஜெயதேவ் உங்கட், பேசில் தம்பி ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்கள்.

First T20 match between India vs Srilanka held today in Barabati Stadium, Cuttack. Rohith Sharma will lead the team as captain. Match will starts at 7 PM. Rohit Sharma (c), MS Dhoni (wk), Lokesh Rahul, Shreyas Iyer, Dinesh Karthik, Manish Pandey, Hardik Pandya, Washington Sundar, Kuldeep Yadav, Jasprit Bumrah, Yuzvendra Chahal, Mohammed Siraj, Deepak Hooda, Jaydev Unadkat, Basil Thampi will listed out in the Indian squad.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS