ஆர்.கே.நகர் தேர்தலை மேலும் தள்ளிப்போட்டால் அதில் அரசியல் நோக்கம் இருப்பதாகவே கருதவேண்டிவரும் என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். ஆர்.கே.நகர் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு விடுதலை சிறுத்தைகள் முடிவெடுக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், மதவாத சக்திகளுக்கு எதிராக நவம்பர் 3ம் தேதி விடுதலை சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாகவும் அதில் தான் பங்கேற்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் குடும்ப அட்டைகளுக்கு வழங்கப்படும் சர்க்கரையின் விலையை இரு மடங்காக உயர்த்தி தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுவரை ஒரு கிலோ ரூ.13.50-க்கு விற்கப்பட்ட சர்க்கரை, நவம்பர் 1ஆம் தேதி முதல் கிலோ ரூ.25 என்ற விலையில் விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த அறிவிப்பு, மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
Viduthalai Siruthaigal party leader Tirumavalavan has said that press person at airport, after RK bypoll date announcement we will decide our decision.